நியூயார்க்: புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மார்க்பர்க்’ வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் ‘மார்க்பர்க்’ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக மாறியுள்ளது.இந்த வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியது.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவும். இவ்வாறு கூறியுள்ளது.இதிலிருந்து தப்ப அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும் என்று கானா மக்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement