Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமான புதிருக்கு அடிமையாகதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கும் இணையம் எங்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாக தேடிப்பார்த்து விடையளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து கண்ணுக்கும் மூளைக்கு வேலை தரக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பே, முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். இதில் எது நிஜமான தோற்றம் என்று பார்ப்பவர்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையையும் குறிப்பிடுகிறது.
அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷ்ன் படம், முதல் பார்வையில் உங்களுக்கு முதலை தெரியும்… ஆனால், அடுத்த 6 நொடிகளில் இன்னொரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் முதலை தெரிகிறதா பாஸ், ஆனால், நீங்கள் அடுத்த 6 நொடிகளில் இன்னொரு பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.
அந்த இன்னொரு பொருளைக் கண்டுபிடித்தால் பாராட்டுகள். இல்லையென்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முதலையின் வாய்ப் பகுதியில் மட்டும் உற்று கவனியுங்கள். இப்போது என்ன தெரிகிறது என்று படத்தை நன்றாகப் பாருங்கள். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் விடையை இங்கே தருகிறோம். ஒரு படகில் மனிதர்கள் இருப்பது போலத் தெரிகிறதா பாருங்கள்.
முதலை:
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் முதலையைப் பார்த்திருந்தால், நீங்கள் எப்போதும் பெரிய விஷயங்களைப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றாத விஷயங்களை கொஞ்சம் புறக்கணிப்பீர்கள். நீங்கள் பல முறை விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதில்லை. நீங்கள் மிகவும் நடைமுறை ரீதியானவர். அதிக ரிஸ்க் எடுப்பவர் அல்ல. நீங்கள் மற்றவர்களை விட கவனமாக வாழ்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். மாற்றங்களை மிகவும் எதிர்க்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள பலருக்கு இது ஒரு வினோதமாகத் தோன்றலாம்.
படகு:
முதலில் உங்களுக்கு படகு தெரிந்தால், உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். நீங்கள் அதிகம் கவனிக்கவில்லை. ஆனால், நீங்கள் சிறிய விவரங்களுக்கு கவனம் செலுத்த முனைகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள பலரைவிட நீங்கள் தனித்துவமானவர், படைப்பாற்றல் மிக்கவர். நீங்கள் ஒரு கலைஞராகவோ அல்லது மாணவராகவோ இருந்தால், சிறிய விஷயங்களில் நீங்கள் மூழ்கிவிட வேண்டியதில்லை. இருப்பினும், நீங்கள் ஒரு படைப்பு மனப்பான்மை கொண்டவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”