முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் இன்று ஈரானுக்கு செல்கிறார்.
உக்ரைனுடனான போர் தொடங்கிய பிறகு முன்னாள் சோவியத் யூனியனுக்கு வெளியே புதின் செல்வது இதுவே முதல் முறை.
ஈரான் செல்லும் புதின், சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பயணம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.