‘மேக் இன் இந்தியா’-வில் ‘மேடு இன் சீனா’ பிரச்சனை.. மோடி அரசிடம் ICEA கோரிக்கை..!

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சிறிய உதிரிபாக தயாரிப்பாளர்களை நாட்டில் உற்பத்தி தளத்தை அமைக்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சீனாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள்மூலம் இந்தியாவின் உற்பத்தி தளம் மேம்படும், அதேபோல் சர்வதேச சந்தைக்கு போட்டியாக இந்தியா வளர்ச்சி அடையை பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள்.

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கான அன்னிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

உற்பத்தி துறைக்கான எகோசிஸ்டம் உருவாக்கவும், முதலீடுகளை உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், திறன் மேம்பாட்டை எளிதாக்கவும், ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையை மேம்படுத்த உதவும் வகையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாறும் நிறுவனங்களுக்கான ​​FDI கொள்கையில் ஒரு தெளிவு வரையறுக்கப்பட வேண்டும் என்று இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ தெரிவித்துள்ளார்.

சீனா

சீனா

சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க ஆர்வமாக இருக்கும் நிறுவனங்களுக்கான அன்னிய முதலீட்டு கொள்கையில் விளக்கம் இல்லாதது பெரும் பிரச்சனையாகவும், தடையாகவும் உள்ளது.

பிரதமர் மோடி
 

பிரதமர் மோடி

பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டுப்பாட்டில் இருக்கும் அன்னிய முதலீட்டு அனுமதிகளில் ஜூன் 29ஆம் தேதி மட்டும் இந்தியா சுமார் 80 சீன அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு முன்பு கடுமையாக கட்டுப்பாடுகள் விதித்து தடை செய்யப்பட்டு இருந்தது.

 இந்திய சீன எல்லை பிரச்சனை

இந்திய சீன எல்லை பிரச்சனை

இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்ட நாளில் இருந்து மத்திய அரசு இந்தியா தனது எல்லையைப் பகிரும் நாடுகளுக்குத் தொடர்புடைய முதலீடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் DPIIT அமைப்பிடம் தனியாக ஒப்புதல் பெற வேண்டும் என அறிவித்து இருந்தது.

382 முதலீட்டு விண்ணப்பங்கள்

382 முதலீட்டு விண்ணப்பங்கள்

இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்பு சீன மற்றும் சீன நிறுவனங்களைத் தொடர்புடைய 382 முதலீட்டு விண்ணப்பங்கள் குவிந்தது. இதில் 80 விண்ணப்பங்களுக்கு ஜூன் 29ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாக RTI கேள்விக்குப் பதில் கிடைத்தது.

 பிரதமர் அலுவலகம்

பிரதமர் அலுவலகம்

இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) அமைப்பு ஜூன் 23 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் மற்றும் பிற ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில்துறைக்கு செலுத்த வேண்டிய அனைத்து ஊக்கத்தொகைகள் மற்றும் நிலுவைத் தொகைகளை “உடனடியாக செலுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Electronics companies ask modi govt to smaller component makers from China in India

Electronics companies ask modi govt to smaller component makers from China in India ‘மேக் இன் இந்தியா’-வில் ‘மேடு இன் சீனா’ பிரச்சனை.. சீன நிறுவனங்களுக்கு வழியை விடுங்கள்.. மத்திய அரசிடம் ICEA கோரிக்கை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.