ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யா மீது தடை விதித்துள்ளன. ரஷ்யா பொருளாதார ரீதீயாக பின்னடைவை சந்தித்தால், தாக்குதலில் இருந்து பின் வாங்கலாம் என மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டன.
ஆனால் ரஷ்யாவோ அதனை தவிடுபொடியாக்கி கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில், இந்தியா சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சப்ளை செய்து வருகின்றது.
3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்!
அதோடு இந்தியா ரஷ்யா இடையேயான கட்டண பரிமாற்றம் குறித்தும் இவ்விரு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஏற்கனவே வொஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய ரூபாயிலேயே கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
திர்ஹாமில் கட்டணமா?
ஆனால் ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, ரஷ்யா சில இந்திய இறக்குமதியாளர்களிடம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயமான திர்ஹாமில் கட்டணமாக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது மேற்கத்திய நாடுகளின் தடை நடவடிக்கைக்கு பிறகு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பல மாத போராட்டம்
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது, பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டாலும் இதுவரையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைனின் பல பகுதிகளையும் ரஷ்யா கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தனிமைப்படுத்த திட்டம்
இதற்கிடையில் தான் மேற்கத்திய நாடுகள் பலவும் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. பல தடைகளையும் அமல்படுத்தி வருகின்றன. மொத்தத்தில் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. இதற்கிடையில் தான் ஸ்விப்ட் பரிமாற்றத்தினையும் தடை செய்தன.
திர்ஹாமில் வேண்டும்
இந்த நிலையில் தான் ரஷ்யா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு திர்ஹாமில் கட்டணமாக எதிர்பார்த்தாக தெரிகின்றது. கச்சா எண்ணெய்க்காக விலை டாலரில் கணக்கிடப்பட்டாலும், கட்டணம் திர்ஹாமில் செலுத்தவும் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா இறக்குமதி
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ் நெப்ட் எனர்ஜி மற்றும் கோரல் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம், இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகின்றது. இது சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணெய் வாங்கும் ஒரு இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. மேற்கத்திய நாடுகளின் தடையால் பல்வேறு நாடுகள் இறக்குமதியினை தவிர்த்து வந்த நிலையில், ரஷ்யா விற்பனையை அதிகரிக்க தள்ளுபடியை கொடுத்தது. எனினும் தடை அச்சத்தால் பல்வேறு நாடுகளும் தவிர்த்தன.
இறக்குமதி அதிகரிப்பு
எனினும் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகின்றன.
பொதுவாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய செலவுகள் அதிகம் என்ற நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த அளவிலான எண்ணெய் வாங்கி வந்தது. இதற்கிடையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் சப்ளை செய்ய ஆரம்பித்தது. இது கடந்த சில மாதங்களில் பல மடங்கு இறக்குமதி அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘சவுதியை ஓரம் கட்டிய ரஷ்யா
ஈராக்கிற்கு பிறகு இந்தியாவுக்கு அதிக சப்ளை செய்வது சவுதி தான். ஆனால் கடந்த சில மாதங்களாக சவுதி அரேபியாவினை காட்டிலும் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இதற்கிடையில் இரண்டு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே திர்ஹாமில் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், இனி வரும் நாட்களிலும் இது தொடரலாம் என்றும் கூறப்படுகின்றது.
ரூபாய் தான் பெஸ்ட்
துபாயில் உள்ள Mashreq Bank வழியாக, Gazprombankக்கு பணம் செலலுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பினை சந்திக்கலாம் என கூறப்படுகின்றது. .
எது எப்படியோ இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்துவதற்கான திட்டத்தினை செயல்படுத்தினால் இவ்வளவு பிரச்சனைகள் இருக்காது என்பது தான் சரி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Russia Expects oil payments from India in dirhams: sources says
Russia Expects oil payments from India in dirhams: sources says/ரஷ்யாவின் திட்டம் தான் என்ன.. திர்ஹாமில் கட்டணமா.. அப்படின்னா ரூபாய் வேண்டாமா?