லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று குடியிருப்புபகுதியில் பயங்கர தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது.
பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என, அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கிரேட்டர் லண்டன் நகரில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து 7 வீடுகளில் தீ பரவியதால் வீட்டில் குடியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேறினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
முன்னதாக கடும் வெப்பம் காரணமாக ரயில் சேவைக்கான மின்சார கம்பிகள், ‘சிக்னல்’ சாதனங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், ரயில் வேகத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசியமிருந்தால் மட்டும் ரயில் பயணம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று குடியிருப்புபகுதியில் பயங்கர தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது.பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்