இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத சரிவில் காணப்படுகின்றது. இது தொடந்து இன்னும் வீழ்ச்சி காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 80 ரூபாய்க்கும் கீழாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது இனி என்னாகும்? முதலீடுகள் என்னாகும்? இனியும் தொடர்ந்து முதலீடு செய்யலாம்? பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.
ரூபாய் சரிவால் இந்தியாவில் பல துறைகள் எதிர்மறையான தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என்றாலும், சில நேர்மறையான தாக்கமும் உள்ளது. அது என்னென்ன? இந்த சவாலான காலக்கட்டத்தில் எதில் முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
ரூபாய் சரிவுக்கு காரணம் என்ன?
இது குறித்து ஈக்விட்டி மாஸ்டரின் நிபுணர், ரிச்சா அகர்வால் என்ன கூறியிருக்கிறார் வாருங்கள் பார்க்கலாம்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், அரசியல் பதற்றம், அமெரிக்காவின் வட்டி விகிதம் குறித்தான முக்கிய நடவடிக்கை உள்ளிட்ட ல்பல காரணிகளும் ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளன. இது பொருளாதாரம் சரிவுக்கும் வழிவகுக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ரூபாய் சரிவால் பலனடையக் கூடிய துறைகள்
இந்தியா மிகப்பெரியளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். ஆக இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதேசமயம் ரூபாய் சரிவால் சில ஏற்றுமதி துறைகள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி துறை, பார்மா துறை, இன்ஜினியரிங் R&D துறை, டெக்ஸ்டைல்ஸ் என சில துறைகள் பலனடையலாம் என கூறியுள்ளார்.
யார் எல்லாம் பயனடையலாம்?
ஐடி ஏற்றுமதியாளர்கள், பார்மா ஏற்றுமதியாளர்கள், டெக்ஸ்டைல்ஸ் துறை ,மற்றும் நகை ஏற்றுமதியாளார்கள், உள்ளிட்டோர் ரூபாய் சரிவால் பயன் அடையலாம். இதன் மூலம் ஏற்றுமதியாளார்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வருமானம் பார்க்க வழிவகுக்கலாம்.
அதோடு ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி காணலாம். ஏனெனில் என்ஐஆர்- கள் செய்யும் ரியல் எஸ்டேட்களின் மதிப்பும் அதிகரிக்கும்.
ஜெம் & ஜீவல்லரி
இந்தியா கடந்த நிதியாண்டில் சுமார் 39.11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜெம் & ஜீவல்லரிகளை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் அதேசமயம் 0.64 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி மற்றும் ஹெல்த்கேர் குறியீடு: சென்செக்ஸ்
இதே நடப்பு நிதியாண்டில் இதுவரையில் பிஎஸ்இ தகவல் தொழில் நுட்பம் மற்றும் பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் 26% மற்றும் 14% வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் ரெசசன் அச்சத்தில் மத்தியில் ஐடி தேவையானது சரியலாமோ என்ற அச்சத்தினால், கடந்த சில வாரங்களாக ஐடி பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன. எனினும் ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இந்த பங்குகள் ஏற்றத்தில் தான் உள்ளன. இதே காலகட்டத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடானது 6.41% சரிவினைக் கண்டுள்ளது.
யாருக்கு பாதிப்பு?
மூலதன பொருட்களுக்காக இறக்குமதியினை நம்பியிருக்கும் நிறுவனங்கள் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம். இது ஆட்டோமொபைல் துறை, ஆயில் & கேஸ், கெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் சரிவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஃப் ஷோரிங் கடனும் நிறுவனங்களின் வளர்ச்சியினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் துறையில் தாக்கம்
குறிப்பாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, நிலக்கரி விலை அதிகரிப்பு, இறக்குமதி செலவு, ஸ்டீல் உள்ளிட்ட சிலவும் ஆட்டோ மொபைல் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏனெனில் ஸ்டீல் தான் அவர்களின் முக்கிய மூலதனமாக உள்ளது. இவ்வாறு நிலவி வரும் அசாதாரணமான நிலைக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பு 79 – 81 ருபாயாக் இருக்கலாம்.
கவனத்தில் கொள்ளுங்க
எது எப்படியோ ஐடி, பார்மா, டீ, கார்மென்ட்ஸ், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட சில துறைகள் பலனடையக் கூடும். இதே மின்சார பொருட்களுக்கு தேவையான மூலதன பொருட்கள், கெமிக்கல்களுக்கு தேவையான மூலதனம், பார்மா ஏற்றுமதயில் சிறந்து விளங்கினாலும் மூலதன பொருட்களை இந்தியா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்தும் வருகின்றது.
ஆக இதனை பொறுத்தே இது சார்ந்த துறைகளின் வள
How to profit during rupee decline?
How to profit during rupee decline?/வரலாறு காணாத சரிவில் ரூபாய்.. இந்த சமயத்தில் எப்படி லாபம் பார்ப்பது?