விஐபி பாதுகாப்பு… சொகுசு இருக்கை… – ‘மிஸ்டர் பேலட் பாக்ஸ்’ டெல்லி சென்ற கதை

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் விஐபி பாதுகாப்பு, சொகுசு இருக்கையுடன் “மிஸ்டர் பேலட் பாக்ஸ்” என்ற பெயரில் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்படி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டனர்.

இதன்படி நேற்று நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், பேரவைகளில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக வாக்குப் பெட்டிகளுக்கு அனைத்து அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த முறை விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக சொகுசு இருக்கையில் இந்த வாக்குப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. ஆதாவது “மிஸ்டர் பேலட் பாக்ஸ்” ‘என்ற பெயரில் ஒரு விஐபி எப்படி டெல்லி சென்றால், அரசு எப்படி அவருக்கு பாதுகாப்பு அளிக்குமோ அந்த வகையில் இந்த ஏற்பாடுகள் இருந்தது.

“மிஸ்டர் பேலட் பாக்ஸ்” சீல் வைக்கப்பட்டு மாநில காவல் துறை பாதுகாப்புடன் விமான நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டது.

விமான நிலையங்களில் சோதனை முடிந்த பிறகு தனி வாகனத்தில் “மிஸ்டர் பேலட் பாக்ஸ்” விமானத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

“மிஸ்டர் பேலட் பாக்ஸ்” உடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும் டெல்லி சென்றுதான் அதை ஒப்படைக்க வேண்டும்.

“மிஸ்டர் பேலட் பாக்ஸ்”களுக்கு விமானத்தில் சொகுசு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

— Spokesperson ECI (@SpokespersonECI) July 19, 2022

“மிஸ்டர் பேலட் பாக்ஸ்”களுக்கு அருகில் மற்றவர்கள் அமர அனுமதி இல்லை.

ஒரு வரிசையில் 3 சீட் இருந்தால், அதில் இரண்டு சீட்டுகள் “மிஸ்டர் பேலட் பாக்ஸ்”களுக்குக்கும், மற்றொரு இருக்கை தேர்தல் நடத்தம் அதிகாரிக்கு முன்பதிவு செய்யப்பட்டது.

ஒரு வரிசையில் இரண்டும் சீட் இருந்தால் இரண்டுமே “மிஸ்டர் பேலட் பாக்ஸ்”களுக்குக்கு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேறு இருக்கையில்தான் அமர முடியும்.

“மிஸ்டர் பேலட் பாக்ஸ்”கள் டெல்லி சென்றடவுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் வெளியே கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற கொண்டு செல்லப்பட்டது.

தனி வாகனத்தில் நாடாளுமன்றம் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் “மிஸ்டர் பேலட் பாக்ஸ்”கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் மிக உயர்ந்த பதிவான குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் என்பதால் இப்படி பலத்த பாதுகாப்புடன் பயணிகள் விமானத்தில், பயணிகளுடன் சொகுசு இருக்கையில், விஐபி பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.