மும்பை, : மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள், லோக்சபாவில் தனிக்குழுவாக செயல்பட சபாநாயகரிடம் அனுமதி கேட்பர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து, அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.,க்கள் சமீபத்தில் வெளியேறினர்.
பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளனர்.இந்நிலையில், அக்கட்சியின் 19 லோக்சபா எம்.பி.,க்களில் 12 பேர் தனிக்குழுவாக செயல்பட திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, ஏக்நாத் ஷிண்டே நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக 12 எம்.பி.,க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.இதில், சிவசேனாவின் 12 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், இந்த 12 எம்.பி.,க்களும் லோக்சபாவில் தனிக்குழுவாக செயல்பட, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement