மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமையன்று, ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாத, தளர்வாக விற்கப்படும் மற்றும் ஃப்ரி பேக் செய்யப்படாத அல்லது முன் லேபிளிடப்படாத பொருட்களின் பட்டியலை வெளியிட்டார்.
47வது ஜிஎஸ்டி கவுன்சில் தனது கூட்டத்தில் சில புதிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் விலைவாசி உயர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நடவடிக்கைகள் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இதன் வாயிலாக இன்று டிவிட்டரில் 14 பொருட்கள் மீதான வரி விதிப்பிற்கு டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார்.
5% ஜிஎஸ்டி
தானியங்கள், அரிசி, மாவு மற்றும் தயிர் போன்ற உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது முன்னரே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒருமித்த முடிவு என்றும், அதில் பாஜக அல்லாதவர்கள் கூட ஆட்சி செய்ததாகவும் கூறினார்.
14 பொருட்கள்
இதே வேளையில்ல பருப்பு மற்றும் பருப்பு வகைகள், கோதுமை, கம்பு, ஓட்ஸ், மக்காச்சோளம், அரிசி, கோதுமை மாவு மற்றும் மைதா, சுஜி/ரவா, கடலை மாவு, பொரி, தயிர்/லஸ்ஸி உள்ளிட்ட 14 பொருட்கள் தளர்வான (loose) மற்றும் முன் பேக் செய்யப்படாத அல்லது முன் லேபிளிடப்படாமல் விற்கப்படும் பொருட்களுக்கு எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை என என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ்நாடு
இதன் மூலம் தமிழ்நாட்டில் சில்லறையில் வாங்கப்படும் அதாவது லூசில் வாங்கப்படும் இந்த அனைத்து 14 பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி இல்லை.லூஸ் என்பது மளிகைக் கடைகளில் பெரிய மூட்டையில் இருந்து சிறிய அளவில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில்
இந்த 5 சதவீத வரி விதிப்பு ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. ஜூன் 28, 2022 அன்று சண்டிகரில் நடைபெற்ற 47வது கூட்டத்தில் வரி விகித மாற்றம் குறித்த விஷயத்தை அமைச்சர்கள் குழு முன்வைத்தபோது அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு ஒப்புதல் அளித்தது.
வரிக் கசிவு தடுப்பு
இந்த வரி உயர்வு முடிவு வரி கசிவைத் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிகாரிகள், அமைச்சர்கள் குழு உட்படப் பல்வேறு மட்டங்களில் இது பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக அனைத்து உறுப்பினர்களின் முழுமையான கருத்தொற்றுமையுடன் ஜிஎஸ்டி கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டது.
No GST on these 14 items when sold loose says Finance Minister Nirmala Sitharaman
No GST on these 14 items when sold loose says Finance Minister Nirmala Sitharaman 11 பொருட்களுக்கு வரி இல்லை.. ஆனால் ஒரு கண்டிஷன்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!