2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்?

சமீபத்திய காலமாக வங்கித் துறையில் கடுமையான சீரமைப்பு பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது இரண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அது என்ன கட்டுப்பாடு, இதனால் யாருக்கு என்ன பலன்? என்ன பாதிப்பு? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? ஏன் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.

1 வருடத்தில் இருமடங்கு சொத்து அதிகரிப்பு.. உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் கெளதம் அதானி!

ரய்காட் சஹாகரி வங்கி

ரய்காட் சஹாகரி வங்கி

மோசமான நிதி நிலையை காட்டி இரண்டு கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

முன்னதாக திங்கட்கிழமையன்று மும்பையில் இயங்கி வரும் ரய்காட் சஹாகரி வங்கி. இந்த வங்கியில் பணம் எடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஏனெனில் இவ்வங்கியின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி சந்தேகப்படுகின்றது.

பணம் எடுக்க  & போட கட்டுப்பாடு

பணம் எடுக்க & போட கட்டுப்பாடு

இதனால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வாடிக்கையாளர்கள் 15,000 ரூபாய்க்கு மேலாக பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல புதியதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட் பெறவும் கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

அது மட்டும் அல்ல ராய்காட் கூட்டுறவு வங்கிக்கு புதியதாக கடன் வழங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் தடை விதிகப்பட்டது.

 இன்று இரு வங்கிகளுக்கு கெடுபிடி
 

இன்று இரு வங்கிகளுக்கு கெடுபிடி

இந்த நிலையில் இன்று கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ மல்லிகார்ஜூன பட்டான சககாரி வங்கி நியாமிதா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த நாசிக் ஜில்லா கிர்னா சக்காரி வங்கி ஆகியவையும் அடங்கும்.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்த வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

டெபாசிட் இன்சூரன்ஸ்

டெபாசிட் இன்சூரன்ஸ்

நாசிக் ஜில்லா கிர்னா சக்காரி வங்கியின் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இவ்வங்கியின் 99.87% டெபாசிட் தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே ஸ்ரீ மல்லிகார்ஜூன பட்டான சககாரி வங்கி நியாமிதா வங்கியில் 99.53% பேர் முழுமையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டெபாசிட் கடனுக்கு அனுமதி

டெபாசிட் கடனுக்கு அனுமதி

வங்கியில் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் அல்லது டெபாசிட்டர்களுக்கு எந்த கணக்குகளிலும் உள்ள மொத்த இருப்பில் இருந்து எந்த தொகையும் இல்லை. ஆக அப்படி இருந்தால் திரும்ப பெற அனுமதிக்கப்படலாம். அதே சமயம் டெபாசிட் தாரர்களுக்கு எதிராக கடன் வழங்க அனுமதிக்கப்படுகின்றது.

மேம்படும் வரை கட்டுப்பாடு

மேம்படும் வரை கட்டுப்பாடு

இவ்விரு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி எந்த கடனையும் வழங்க கூடாது. முதலீட்டினையும் புதுபிக்க கூடாது எனவும், இந்த இரு வங்கிகளின் நிதி நிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தினை தொடரலாம் என தெரிவிதுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ

English summary

RBI has imposed strict restrictions on 2 cooperative banks

RBI has imposed strict restrictions on 2 cooperative banks/2 கூட்டுறவு வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. ஏன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.