AI டெக்னாலஜி மூலம் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்.. கோடாக் கொண்டு வந்த அசத்தல் வசதி!

ஒரு வாகன இன்சூரன்ஸ் எடுத்து இருப்பவர் அந்த இன்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும் என்றால் வாகனத்தில் என்னென்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வை ஒரு மோட்டார் மெக்கானிக் செய்து அவர் வாகன இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் வாகன இன்சூரன்ஸ் நிறுவனம், இன்சூரன்ஸ் தொகையை நிர்ணயம் செய்யும்.

வரும் வாரத்தில் தங்கத்தின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்.. விலை என்னவாகுமோ?

ஆனால் தற்போது வெளியாகி AI டெக்னாலஜி அதாவது Artificial Intelligence டெக்னாலஜி மூலம் வீட்டிலிருந்தபடியே நமது வாகனத்தின் இன்சூரன்ஸை புதுப்பித்து கொள்ளலாம். கோடாக் நிறுவனம் அறிவித்துள்ள இந்த புதிய வசதியால் வாகன உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

AI டெக்னாலஜி

AI டெக்னாலஜி

கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தற்போது AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்ப வசதியுடன் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிப்புகளுக்கான தானியங்கி வாகன சோதனைகளை அறிவித்துள்ளது.

கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ்

கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ்

கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் AI அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாகன ஆய்வு செயல்முறையை தானியக்கமாக்குவதற்கு Inspektlabs என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. AI டெக்னாலஜி அடிப்படையிலான ஆய்வு செயல்முறையின் கீழ், பாலிசி புதுப்பித்தல்களின் போது, ​​வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை படம் பிடித்து, கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டில் பதிவேற்றலாம்.

செலவு-நேரம் குறைகிறது
 

செலவு-நேரம் குறைகிறது

புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவேற்றிய சில நொடிகளில் வாகனத்தின் சேதங்களை உள்ளடக்கிய தானியங்கு ஆய்வு அறிக்கை உருவாக்கப்படும். தன்னியக்க செயல்முறையானது மிக மிக துல்லியமான அளவில் மனிதர்களை திரும்பத் திரும்ப செய்யும் பணியில் ஈடுபடுத்துகிறது. இது செலவை மட்டுமின்றி வாகன இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கத் தேவையான நேரத்தையும் குறைப்பதால் வாடிக்கையாளர்களின் திருப்தியை அதிகரிக்கிறது. பதிவேற்றப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் மோசடியை கண்டறியவும் இந்த AI தொழில்நுட்பம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடியை கண்டுபிடிக்க உதவும்

மோசடியை கண்டுபிடிக்க உதவும்

கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுரேஷ் சங்கரநாராயணன் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், நேரம் மற்றும் செலவுகளை குறைக்கவும், அதே நேரத்தில் மோசடிகளை கண்டுபிடிக்கவும் இந்த AI டெக்னாலஜி உதவும் என்று கூறியுள்ளார்.

சிறந்த சேவை

சிறந்த சேவை

கடந்த சில ஆண்டுகளாக AI டெக்னாலஜி பல துறையில் உள்ளவர்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் எங்கள் வணிகங்கள் மற்றும் கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற தீர்வுகளை வழங்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இந்த புதிய தொழில்நுட்ப சேர்க்கை மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kotak General Insurance Launches AI-Based Vehicle Pre-Inspection

Kotak General Insurance Launches AI-Based Vehicle Pre-Inspection| AI டெக்னாலஜி மூலம் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிப்பு.. கோடாக் கொண்டு வந்த அசத்தல் வசதி!

Story first published: Tuesday, July 19, 2022, 6:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.