மருத்துவ படிப்பிற்காக இந்திய அளவில் அனைத்து மாணவர்களும் எழுதக்கூடிய நீட் தேர்வு 2022 நேற்று நிறைவு பெற்றது. இந்த தேர்விற்கான எதிர்பார்ப்புகள் மக்களிடையே பெருமளவு இருக்கின்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் கல்வி ஆலோசகரான ஜெயபிரகாஷ் காந்தி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
கல்வி ஆலோசகரான ஜெயபிரகாஷ் காந்தி, உயர்கல்வி மதிப்பாய்வின் மூலம் இந்தியாவின் சிறந்த 10 தொழில் ஆலோசகர்களில் ஒருவராக விருது பெற்றுள்ளார். TNEA Cutoff & Analysis, NEET Cutoff & Analysis, வேலைவாய்ப்புகள், டிஜிட்டல் கற்றல் – முக்கியமான படிப்புகள் மற்றும் திறன் தொகுப்புகள், சிறந்த துறையை தேர்ந்தெடுப்பது, நுழைவுத் தேர்வுகள், வெளிநாட்டில் படிப்பது, சமீபத்திய கல்வி மற்றும் தொழில்நுட்பச் செய்திகள் மற்றும் கொள்கைகளை தனது யூடூப் சேனலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
ஜெயபிரகாஷ் காந்தி 20 ஆண்டுகளில் 7550 திட்டங்கள் மற்றும் 2350 வேலை வாய்ப்பு பயிற்சி அமர்வுகள் மூலம், 2 மில்லியன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நீட் தேர்வு கட் ஆஃப் இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
அவர் கூறுவதாவது, “இந்தாண்டு நீட் தேர்விற்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை தந்துள்ளனர். வினாத்தாளின் சிரம நிலை மிதமானதாக இருந்தது, பெரும்பாலான கேள்விகள் எதிர்பார்க்கப்பட்டவையாக அமைந்துள்ளது.
இயற்பியல் பாடத்திலிருந்து சில கடினமான கேள்விகள் வந்துள்ளது, வேதியியலில், எதிர்பாராத தலைப்புகளிலிருந்து பயன்பாட்டின் அடிப்படையில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து வந்த கேள்விகள் எதிர்பார்த்தவாறு அமைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சில பள்ளி மாணவர்கள் இத்தேர்வை சற்று கடினமாக உணருகின்றனர். ரிப்பீட்டர்கள்களுக்கு இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக கூறுகின்றனர், அவர்களுக்கு எதிர்பார்த்த கேள்விகள் வந்ததாக கூறுகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எழுதிய மாணவர்களின் கருத்துக்கள் முதல் முறையாக பரவலாக வேறுபடுகின்றன.
NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையிலான கேள்விகள் சுமார் 98 சதவீதத்திற்கு தேர்வில் வந்துள்ளது. உயிர் மூலக்கூறுகள் மற்றும் உயிரி தொழில்நுட்ப பயன்பாடுகள் பற்றிய கேள்விகள் வெளி பாடத்திட்டத்தில் இருந்து வந்துள்ளதாக மாணவர்கள் வருத்தமளிக்கின்றனர்.
NCERT பாடத்திட்டத்தை நன்றாக படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அகில இந்திய அளவில், கட் ஆஃப் உயரும் வாய்ப்பு ஓரளவு உள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, கட் ஆஃப் கிட்டத்தட்ட வழக்கமாக இருப்பது போல் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 585 முதல் 590 வரை மதிப்பெண்கள் எதிர்பார்க்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 540 முதல் 550 வரை மதிப்பெண்கள் எதிர்பார்க்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 510 முதல் 520 வரை எதிர்பார்க்கலாம்.
இது என்னுடைய முன் பகுப்பாய்வு மட்டுமே என்பதை கூறிக்கொள்கிறேன். மதிப்பீடுகள் மற்றும் முடிவுகளுக்குப் பிறகு, இந்த பகுப்பாய்வுகளில் நாம் உறுதியாக இருக்க முடியும்.
மிக அதிகமாகவும் குறைவாகவும் கட் ஆஃப் மாறக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தமிழ்நாடு மாணவர்கள் அதிக மருத்துவ துறையின் இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்தாண்டு நீட் தேர்வில், அரசு மாணவர்களின் பங்கேற்பு மற்றும் செயல்திறன் சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள், இந்த ஆண்டு கலந்து கொண்டனர். இந்தத் தேர்வில் 75% ஒதுக்கீடு ரிப்பீட்டர்களின் ஆதிக்கமாக இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கட்ஆஃபை அதிகரிப்பதற்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
அரசு மாணவர்கள் 720க்கு 300 மதிப்பெண்கள் எதிர்பார்க்கலாம். வினாத்தாளில் இருந்து இரண்டு கேள்விகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்து தேசிய தேர்வு முகமையின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்”, என்று கூறுகிறார்.