புதுடெல்லி: ஒன்றிய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்தப்பூர்வமான பதிலில், ‘இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் வகையில், ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, ஃபேம் இந்தியா திட்டமானது இரண்டாம் கட்டத்தை எட்டியும்ளது. எலெக்டரிக் பேட்டரி விலையை குறைக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் (ஏசிசி) உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் மட்டும் அதிகபட்சமாக 1,56,393 எலெக்டரிக் வாகனங்களும், மகாராஷ்டிராவில் 1,16,646 எலெக்டரிக் வாகனங்களும், நாடு முழுவதும் மொத்தம் 13.34 லட்சம் எலெக்டரிக் (மின்சார) வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில் மின்சாரம் அல்லாத வாகனங்களின் எண்ணிக்கை 27.81 கோடியாக உள்ளது’ என்று பதிலளித்தார்.