வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து விலகினார். தற்காலிக அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். அனைத்துக் கட்சிகள் கோரிக்கையை ஏற்று, நாளை அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் மீதமுள்ள பதவிக் காலமான, 2024, நவ., வரை புதிய அதிபர் பதவி வகிப்பார்.
புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை பார்லிமென்டில் இன்று நடந்தது. ரணில் விக்கிரமசிங்கே, ஜனதா விமுக்தி பெரமுணா தலைவர் அனுரா குமார திசநாயகே மற்றும் இலங்கை பொதுஜன பெரமுணாவில் இருந்து பிரிந்து சென்ற டல்லாஸ் அழகப்பெருமா ஆகியோரும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இன்று நடந்த தேர்தலில், முதல் ஓட்டை சபாநாயகர் அபேவர்தனா பதிவு செய்தார். 2வது ஓட்டை ரணில் விக்கிரமசிங்கே போட்டார். தொடர்ந்து எம்.பி.,க்கள் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஓட்டளிக்க வந்தார். ஆனால், அவரது சகோதரர் பசில் ராஜபக்சே வரவில்லை. மொத்தமுள்ள 225 ஓட்டுகளில் 219 ஓட்டுகள் பதிவாகின. அதில் ரணில் விக்கிரமசிங்கே 134 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். இலங்கையில் 8 வது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வாகி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement