`உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது இதுவா முதல்முறை?’- ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் கேள்வி

உணவு தானியங்கள் மீது வரி விதிப்பு என்பது புதிதல்ல என்றும் அரிசி, கோதுமை மீதான வரி விதிப்பு குறித்து தவறான கருத்து நிலவுதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
பிராண்ட் அல்லாத 25 கிலோ வரை சிப்பங்களில் விற்கப்படும் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் சில பதிவுகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

#GST @FinMinIndia @PIB_India @PIBMumbai @PIBChandigarh @PIBHyderabad @pibchennai @PIBKolkata @PIBKohima @PIBGuwahati @PIBHindi @cbic_india https://t.co/EDWfuYnGzC
— Nirmala Sitharaman (@nsitharaman) July 19, 2022

தனது ட்விட்டர் பதிவில் `உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது இது முதல்முறையா’ எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், ஜிஎஸ்டி அமலாவதற்கு முன், மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட வரியை பட்டியலிட்டுள்ளார்.
Image
மேலும் 25 கிலோ வரை பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பிராண்ட் அல்லாத லேபிள் ஒட்டிய சிப்பங்களுக்கு மட்டுமே 5 சதவிகித ஜிஎஸ்டி பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.