உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்பதை இரு முக்கியக் காரணிகள் வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று பாஸ்போர்ட் பவர் ரேங்க் (PPR), மற்றொன்று வரவேற்கும் நாடுகளின் மதிப்பெண் (WCS).
பாஸ்போர்ட் பவர் ரேங்க் என்றால் பாஸ்போர்ட் அவற்றின் மொபிலிட்டி ஸ்கோரின் அடிப்படையில் தர வரிசை செய்யப்படப்படுகிறது. அதிக மொபிலிட்டி ஸ்கோர் கொண்ட பாஸ்போர்ட் தான் பவர் ரேங்க்-ல் சிறந்தது. இதில் மொபிலிட்டி ஸ்கோர் என்பது எத்தனை நாடுகள் ஒரு நாட்டின் பாஸ்போர்ட்-ஐ எவ்விதமான தடையும் இல்லாமல் ஏற்கிறது என்பது தான்.
இதேபோல் வரவேற்கும் நாடுகளின் மதிப்பெண் (WCS) என்பது விசா இல்லாத அல்லது வருகையின் போது விசாவுடன் ஏற்றுக்கொள்ளும் பாஸ்போர்ட்டுகளின் எண்ணிக்கையால் ஒவ்வொரு நாடுகளையும் தர வரிசைப்படுத்தப்படுகின்றன.
ரூ.28.6ல் இருந்து 546.6.. 1800% வருமானம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா!
ஜப்பான் முதல் இடம்
பாஸ்போர்ட் பவர் ரேங்க் (PPR), மற்றும் வரவேற்கும் நாடுகளின் மதிப்பெண் (WCS) அடிப்படையில் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் தான் உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஆக விளங்குகிறது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் கொண்டு உள்ள மக்களை 193 நாடுகளுக்குத் தொந்தரவு இல்லாத நுழைவை வழங்குகிறது.
சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா
குடியேற்ற ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸின் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஜப்பான் முதல் இடத்தைப் பிடித்த நிலையில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா
மேலும் இப்பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் 87வது இடத்தில் உள்ளது. இந்தியா பாஸ்போர்ட் கொண்டு உள்ளவர்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பூட்டான், நேபாளம், இந்தோனேசியா மற்றும் மக்காவ் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியர்கள் வெளியேற்றம்
சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் 1,63,370 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை வேண்டாம் என அறிவித்து மற்ற நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை அமெரிக்காவில் (78,284) பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (23,533), கனடா (21,597) மற்றும் பிரிட்டன் நாட்டில் (14,637) பெற்றுள்ளனர்.
முன்னணி நாடுகள்
முதல் இடத்தை ஜப்பானும், 2வது இடத்தைச் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா பகிர்ந்துள்ளது போல் 3, 4,5 வது இடங்களையும் இரு நாடுகள் பகிர்ந்துள்ளது. ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் 3வது இடம், பின்லாந்து, லக்சம்பர்க் மற்றும் இத்தாலி 4வது இடம், ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் 5வது இடம்.
சீனா, ஆப்கானிஸ்தான்
80 நாடுகளுக்கு அனுமதியை அளிக்கும் சீனா பாஸ்போர்ட்-க்கு 69 வது இடம், ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் தான் கடைசி இடத்தில் வெறும் 27 நாடுகளில் மட்டுமே அனுமதி அளிக்கும் நிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இருந்து இதன் தரம் குறைத்துள்ளது.
world’s most powerful passports in 2022; Japan at first place, Check India, China, Afghanistan ranking
world’s most powerful passports in 2022; Japan at first place, Check India, China, Afghanistan ranking உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா..?!