வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை ஜப்பான் நாடு பெற்றுள்ளது. அதே நேரம் மிகவும் குறைந்த மதிப்புள்ள பாஸ்போர்ட் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.
லண்டனை தலைமையிடமாக கொண்டு ஹென்லி அன் பார்ட்னர்ஸ் என்ற குடியேற்றம் தொடர்பான ஆலோசனை நிறுவனம் பல்வேறு முதலீடு , நிதி ஆலோசனை, பாஸ்போர்ட் குறித்த குறியீட்டு சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கிறது.
இந்த நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டு பிரிவு 2022-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 10 நாடுகளின் பாஸ்போர்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜப்பான் முதல் இடத்திலும், சிங்கப்பூர் இரண்டாமிடமும், தென்கொரியா மூன்றாம் இடமும் பெற்றுள்ளது. ஜப்பான் பாஸ்போர்ட்களை 193 நாடுகள் அங்கீகரிக்கின்றன. சிங்கப்பூர், மற்றும் தென்கொரியா நாடுகளின் பாஸ்போர்ட்களை 192 நாடுகள் அங்கீகரிக்கின்றன. தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, டென்மார்க், ஜெர்மனி, பிரிட்டன், ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் இந்தியா 87-வது இடத்திலும், பாகிஸ்தான் 109 இடத்திலும் உள்ளது.குறைந்த மதிப்புள்ள பாஸ்போர்ட் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. இந்நாட்டின் பாஸ்போர்ட்டினை 27 நாடுகள் அங்கீகரிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு இதே போன்று கனடாவைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்தது, இந்தியா 70-வது இடத்தில் இருந்தது.குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement