சென்னை: தமிழக உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக, காத்திப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலனை நியமித்து தமிழக உள்துறைச் செயலர் பனீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாக, இந்த மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
உளவுத் துறை ஐஜி மட்டுமின்றி மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
> திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம்.
> மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.-யாக மகேஸ்வரன் நியமனம்.
> சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம்.
> சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்.
> காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி-யாக கண்ணன் நியமனம்.
> ஏஎஸ்பிகளாக இருந்த சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவாச், ஹர்ஷ் சிங், சாய் பிரணீத் ஆகியோர் எஸ்.பி.-க்களாக பதவி உயர்வு.