விமானம் மூலமான அஞ்சல்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அத்துடன் இந்த கட்டண உயர்வு 2022 ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதன் விளைவாக அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் இருந்து தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வதை திணைக்களம் முன்பு நிறுத்தியிருந்தது.
எவ்வாறாயினும், மூன்று நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
இதன்மூலம், அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து தபால் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.