டெல்லி: ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான வரியை முழுமையாக ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.6 வீதம் விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி வரி ஜூலை 20 முதல் முழுவதுமாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.