திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி ஒரே அரசு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணியாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கிரி மற்றும் தாரா காதல் தம்பதி. அம்மாநில அரசு பேருந்து ஒன்றில் கிரி ஓட்டுநராகவும், தாரா நடத்துனராகவும் பணியாற்றி வருகிறார். 20 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கொரோன ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்தனர். இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சிசிடிவி, அவசரகால் சுவிட்ச்கள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவை கொண்டிருக்கின்றன. பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி போர்டு வசதி பேருந்தில் இருக்கிறது. பேருந்து அழகாக தோற்றம் அளிக்க இந்த தம்பதி தங்களுடைய சொந்த நிதியை செலவிட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனி ரசிகப்பெருமக்களும் இருக்கிறார்கள்.