தோஹா:கத்தார் நாட்டில், 29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான கத்தாரில், தலைநகர் தோஹா அருகே தொழிற்சாலை பாதுகாப்பு பகுதி உள்ளது. இங்கு, ஏராளமான தெரு நாய்கள் அங்குள்ளோரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இருவர் துப்பாக்கியுடன் அப்பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
இதையடுத்து, உள்ளே சென்ற இருவர் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர். இதில், குட்டிகள் உள்ளிட்ட 29 நாய்கள் பரிதாபமாக இறந்தன; பல நாய்கள் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தன.இந்த சம்பவம் குறித்து, ‘பாவ்ஸ்’ எனப்படும் பாதுகாப்பு அமைப்பு சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:கத்தாரில் இருவர் கொடூரமாக அப்பாவி பிராணிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களின் குழந்தையை நாய் கடித்ததால், ஆத்திரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement