கடந்த மூன்று வருடங்களில் 3.9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை விட்டுகொடுத்தாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 3.9 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை விட்டுகொடுத்துள்ளனர். 2021ம் ஆண்டில் சுமார் 1.63 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை விட்டுகொடுத்துள்ளனர். மேலும் 78 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளனர்.
பிஎஸ்பி கட்சி எம்பி ஹசி பெஸ்லூர் ரெஹமான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளில் 3.9 லட்சம் இந்தியவர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடியுரிமையை 7,046 பேரும், ஸ்வீடன் குடியுரிமையை 3,754 பேரும், பெஹரின் குடியுரிமையை 170 பேரும், இரான் குடியுரிமையை 21 பேரும், 1,400 பேர் சீன குடியுரிமையும் பெற்றுள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil