திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடும்ப பிரச்சினையால் இளம்பெண் ஒருவர் சூட கட்டிகளை தண்ணீரில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்ததுடன் தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மேலவாசல் ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான விவேக் மன்னார்குடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக உள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் 8 மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த சில வாரமாக விவேக் இரவு பணிக்கு செல்வதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல விவேக் இரவு பணிக்கு சென்றுவிட்ட நிலையில், அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கும் சூட கட்டிகளை தண்ணீரில் கலந்து கொடுத்த சத்யா, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்ததை அடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற விவேக், மனைவி மற்றும் 3 குழந்தைகளை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.