குட்கா முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய அனுமதி கோரும் சிபிஐ

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் என மொத்தம்  12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற  அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி சிபிஐ பிரிவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பிவி ரமணா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்ததன் அடிப்படையில் கடிதம் அனுப்பியுள்ளது. சிபிஐயில் இருந்து தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு  இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

image
2017-ஆம் ஆண்டு இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. 2017-ல் சம்பந்தப்பட்ட குட்கா நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. இந்த சம்பவம் நடைபெற்றபோது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியிருக்கிறது.
ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதல் குற்றப்பத்திரிகையை 2018-ஆம் ஆண்டு ஆறு பேர் மீது (மூன்று அதிகாரிகள்) தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பாக 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தற்போது அனுமதி கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்புடன் ஜாக்கிங் சென்ற அமைச்சர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.