குட் நியூஸ்..!! அரிசி, கோதுமை, தயிர் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயர்ந்தது. மேலும் ரூ.1000-க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1,050 ஆக விலை உயர்ந்தது.

Nirmala-Sitharaman

மத்திய அரசின் இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து சுட்டுரையில் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத, சீலிடப்படாத தானியங்களுக்கும் ஜிஎஸ்டி இல்லை. அவற்றிற்கு ஜிஎஸ்டி பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தெந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, பருப்பு மற்றும் பருப்பு வகைகள், கோதுமை, கம்பு, ஓட்ஸ், மக்காச்சோளம், அரிசி, கோதுமை மாவு மற்றும் மைதா, சுஜி/ரவா, கடலை மாவு, பொரி, தயிர்/லஸ்ஸி உள்ளிட்ட 14 பொருட்கள் தளர்வான (loose) மற்றும் முன் பேக் செய்யப்படாத அல்லது முன் லேபிளிடப்படாமல் விற்கப்படும் பொருட்களுக்கு எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை என என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதாவது சில்லறையாக பைகளில் அடைக்கப்படாமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது. ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி பொருந்தும்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.