ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் சமீபத்தில் அதன் புதிய மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தினை கோயம்புத்தூரில் தொடங்கியது.
இந்த நிலையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அக்சென்ச்சர் அறிவித்துள்ளது.
அக்சென்ச்சர் நிறுவனம் உலகின் முன்னணி டிஜிட்டல், கிளவுட் சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
பிளாஸ்டிக் கழிவில் ரூ.1 கோடி வருமானம்.. அசத்தும் டெல்லி கனிகா..!
எங்கு விண்ணப்பிப்பது?
இது சில தினங்களுக்கு முன்பு தான் அதன் புதிய கிளையை கோயம்புத்தூரில் தொடங்கியது. இங்கிருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விருப்பமுள்ள ஊழியர்கள் https://www.accenture.com/in-en/careers என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஏன் கோயம்புத்தூர்?
AITC, அசென்ச்சரின் மூத்த நிர்வாக இயக்குனர் மகேஷ் ஜூரேல் கூறுகையில், எங்கள் இருப்பினை டயர் 2 நகரங்களில் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கோயம்புத்தூர் இந்தியாவின் முன்னணி சில கல்வி நிறுவனங்களின் தாயகமாக இருப்பதால், இது எங்களின் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.
கவனம்
நாங்கள் தொடர்ந்து இந்தியாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். திறனுள்ள ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக கிளவுட், டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு, மேட்டாவெர்ஸ் மற்றும் சில பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேம்பட்ட தொழில் நுட்ப மையங்கள்
கோயம்புத்தூர் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைத்ராபாத், இந்தூர், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளிலும் அக்சென்சசரின் மேம்பட்ட தொழில் நுட்ப மையங்கள் இந்தியாவில் உள்ளன.
அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட அக்சென்ச்சர், அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் கொள்கைகள், கற்றல் மற்றும் மேம்பாட்டில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.
How to apply for job in Coimbatore Accenture?
How to apply for job in Coimbatore Accenture?/கோவை அக்சென்ச்சரில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. எப்படி அப்ளை செய்வது?