கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலிருந்து ஒரு நோயாளி, அவருடன் இரண்டு மருத்துவ உதவியாளர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நோயாளி, இரண்டு மருத்துவ உதவியாளர்கள் என 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நான்கு பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த வீடியோவை இதயம் பலவீனமாக உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்த்தல் நல்லது..!
இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், தூரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வருவதைக் கண்டு சுதாரிக்கும் சுங்கச்சாவடி ஊழியர்கள், ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தும் வகையில், அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றுகிறார்கள். அசுர வேகத்தில் சுங்கச்சாவடி நோக்கிவந்த ஆம்புலன்ஸ், மழையால் ஈரமாக இருந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து, சுங்கச்சாவடிமீது பயங்கரமாக மோதுகிறது. அதில், ஆம்புலன்ஸிலிருந்த நோயாளி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவரும் வெளியில் தூக்கி வீசப்படுகிறார்கள்.