மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 47வது ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்தில் ப்ரீ பேக் செய்யப்பட்ட பிராண்டட் அரிசி, கோதுமை மாவு, மைதா, பருப்பு வகைகள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதித்தது. இது சாமானிய நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த வரி உயர்வுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டிவிட்டரில் நேற்று நிர்மலா சீதாராமன் வரி கசிவை தடுத்த அமைச்சர்கள் குழு-வின் பரிந்துரையில் பெயரில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஒப்புதல் அடிப்படையில் தான் இந்த வரி உயர்வு கொண்டு வரப்பட்டது எனப் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய வழியைக் கண்டறிந்துள்ளது.
ஆபீஸ், வீடு, வாகனம் எல்லாமே சோலார்.. அசத்தும் ஊழியர்.. மாதம் ரூ.18,000 மிச்சம்.. எப்படி?
ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டம்
47வது ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்தில் ப்ரீ பேக் செய்யப்பட்ட பிராண்டட் தானியங்கள், அரிசி, மாவு மற்றும் தயிர் போன்ற உணவுப் பொருட்களுக்கு மட்டும் தான் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, லூஸ்-ல் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எவ்விதமான வரியும் இல்லை என விளங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
14 பொருட்கள்
இதற்கு அடுத்த டிவீட்டில் பருப்பு மற்றும் பருப்பு வகைகள், கோதுமை, கம்பு, ஓட்ஸ், மக்காச்சோளம், அரிசி, கோதுமை மாவு மற்றும் மைதா, சுஜி/ரவா, கடலை மாவு, பொரி, தயிர்/லஸ்ஸி உள்ளிட்ட 14 பொருட்கள் தளர்வான (loose) மற்றும் முன் பேக் செய்யப்படாத அல்லது முன் லேபிளிடப்படாமல் விற்கப்படும் பொருட்களுக்கு எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லை என என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதிக எடை கொண்ட பேக்குகள்
இதேவேளையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மளிகை கடைகளுக்கு அளிக்கப்படும் அதிக எடை கொண்ட ப்ரீ பேக் செய்யப்பட்ட, பிராண்டட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு எவ்விதமான ஜிஎஸ்டி வரியும் இல்லை என்பதால் இதை வர்த்தகத்தில் பிரதானப்படுத்த திட்டமிட்டு உள்ளது நிறுவனங்கள்.
25 கிலோவுக்கு மேல்
அதாவது ப்ரீ பேக் செய்யப்பட்ட பிராண்டட் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு 25 கிலோவுக்குக் கீழ் இருக்கும் பாக்கெட்களுக்குத் தான் 5 சதவீத ஜிஎஸ்டி வரி, 25 கிலோவுக்கும் அதற்கு மேல் இருக்கும் பேக்குகளுக்கு எவ்விதமான ஜிஎஸ்டி வரியும் இல்லை. இது பொதுவாக மளிகை கடைகளுக்குச் சில்லறை விற்பனைக்காகக் கொடுக்கப்படுவது.
நிறுவனங்கள் முடிவு
ஜிஎஸ்டி வரி சுமையைக் குறைக்கப் பருப்பு, கோதுமை, அரிசி, மைதா, ரவை போன்ற உணவு பொருட்களைத் தயாரித்து அல்லது பிராண்டெட் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் சிறிய அளவிலான பாக்கெட்களைச் செய்து விநியோகம் செய்வதைக் குறைத்துவிட்டு, 25 கிலோ பேக்குகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
நடைமுறையில் சாத்தியமாக
தற்போது சிறு கிராமங்களில் இருக்கும் கடைகளில் கூட மேலே கூறப்பட்ட அனைத்து உணவு பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இது ரீடைல் கடைகளுக்கு எளிய வர்த்தக முறையாக இருப்பது மட்டும் அல்லாமல் உணவு பொருட்களின் தரத்தை கட்டுப்படுத்தவும், நிலைநிறுத்தவும் பெரிய அளவில் உதவுகிறது.
பாதிப்பு மக்களுக்குத் தான்
இந்தச் சூழ்நிலையில் குறைவான எடை கொண்ட பாக்கெட்களுக்கு அதிக வரி விதிப்பது மூலம் மக்களுக்குத் தான் சுமை அதிகரிக்கும், ஆரம்பத்தில் வரி உயர்வின் பாதிப்பை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டாலும் அடுத்தச் சில மாதத்தில் இதன் பாதிப்பை வாடிக்கையாளர் மீது திருப்பும்.
Companies started making heavier packets over 25 kg to avoid 5 percent GST
Companies started making heavier packets over 25 kg to avoid 5 percent GST ஜிஎஸ்டி-யில் இருந்து தப்பிக்க நிறுவனங்கள் புதிய முயற்சி..!