டிவிட்டர் வாங்குவது தொடர்பான வழக்கில் எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Twitter vs Elon Musk: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் இடையிலான சட்ட மோதல் அக்டோபருக்கு ஒத்தி போடப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்க முடிவு செய்த மஸ்க், 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். பிறகுக் நிர்பந்திக்க முடியுமா என்பதை தீர்மானிக்க இரு தரப்பினரையும் அக்டோபரில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான  ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் எலான் மஸ்க்.

போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறினால், இந்த ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக எலோன் மஸ்க் அறிவித்ததை அடுத்து டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. செவ்வாயன்று (ஜூலை 19), அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்ற எலான் மஸ்க் வழக்கறிஞரின் முறையீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்தார்.  

 

வழக்கை செப்டம்பர் மாதம் விசாரிக்க வேண்டும் என்ற ட்விட்டரின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அக்டோபர் மாதத்தில் விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிமன்றம் விசாரணைக்கான தேதியை குறிப்பிடவில்லை.  

மேலும் படிக்க | Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்

விசாரணையின்போது நீதிபதியிடம் முறையிட்ட ட்விட்டர் வழக்கறிஞர் வில்லியம் சாவிட்,”வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும், அதற்கான நியாயமான பல காரணங்கள் எங்களிடம் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
“எலோன் மஸ்க், வர்த்தக ஒப்பந்தத்தைப் புறக்கணித்ததால் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை ஒவ்வொரு நாளும், ஏன் ஒவ்வொரு மணிநேரமும் ட்விட்டரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள எலான் மஸ்குக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டால், கடன் நிதியுதவி என பல காரணங்களின்லா, மேலும் சில மாதங்கள் அதிகம் ஆகலாம், இது ஏப்ரல் மாதத்தில் காலாவதியாகும்.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் ‘Sail’ குப்பைகளை அகற்றுமா

எனவே உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய டிவிட்டர், பிப்ரவரியில் விசாரணை நடத்த வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் வேண்டுகோளை நிராகரிக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டது.

டிவிட்டரின் ஒரு பங்கை 54.20 டாலர் அல்லது மொத்தமாக 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் பிரபல சமூக ஊடக வலைதளத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார்.  

இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கூறிய எலான் மஸ்கின் செயல், நிறுவனத்திற்கு ஏற்படுத்திய சேதத்தை, எந்தவிதமான இழப்பீடும் சரி செய்ய முடியாது என்று டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் கவலையை பதிவு செய்தது.

இறுதியில் இரு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, அக்டோபர் மாதத்தில் விசாரனை நடைபெறும் என்று அறிவித்தார். விசாரணை தேதி பிறகு அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.