தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள தனியார் பள்ளியில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று மாலை இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவருக்கு கால் முறிவும், தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பள்ளி இருக்கும் பகுதியில் கள்ளக்குறிச்சியில் நடந்தது போல் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
tamil.abplive
மாணவனின் தற்கொலை முயற்சி குறித்த முதற்கட்ட விசாரணையில், சக மாணவிக்கு குறித்த மாணவர் இனிப்பு கொடுக்க முயன்றதால் கண்டிக்கப்பட்டுளார். அதன் பின்னரும் இரண்டாவது முறையாக அவர் அதே செயலில் ஈடுபட ஆசிரியர்கள் பார்த்துள்ளனர்.
இதனால் பயந்துபோன மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் மாணவரின் பெற்றோர் வேறொரு காரணத்தை கூறியுள்ளனர். மாணவரும் சுயநினைவின்றி இருப்பதால் முழு விசாரணைக்கு பின்னரே உண்மை காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.