வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், கோசனோவ் நினைவு தடகளப் போட்டியில் 200மீ ஓட்டத்தில் 22.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவர் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வானார்.
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தனலட்சுமி சோதனையில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், கர்நாடகாவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement