பெங்களூரு : ‘நடைபாதைகளை எலி, பெருச்சாளிகள் சேதப்படுத்துகின்றன’ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் பல்வேறு இடங்களில், மாநகராட்சி சார்பில் சிமென்ட் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை அமைத்த சில நாட்களிலேயே சேதம் அடைகின்றன. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்ட நடைபாதைகள் சேதம் அடைவதால், பொதுமக்கள் வரிப்பணம் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நடைபாதைகள் சேதம் அடைந்ததற்கு எலி, பெருச்சாளிகள் தான் காரணம். நடைபாதையை பாழாக்குவதால் சிமென்ட் கற்கள் பெயர்ந்து விடுகின்றன. இத்துடன், தள்ளுவண்டி வியாபாரிகளும் கூடாரம் அமைப்பதற்காக தோண்டுவதால் சேதம் அடைகின்றன. இதற்கு மாநகராட்சி பொறுப்பல்ல’ என, கூறி உள்ளனர்.மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கத்துக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘தாங்கள் செய்த தவறுக்கு எலிகள், பெருச்சாளிகள் மீது பழி போடுவது ஏன்’ என, கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement