டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைரை உடனடியா சிறையில் இருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்ட 6 வழக்குகளிலும் ஜுபைருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆல்ட் நியூஸ் இணையதள ஆசிரியர் முகமது ஜுபைர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.