பாகிஸ்தானை பதம் பார்க்கும் அமெரிக்க டாலர்.. இம்ரான் கான் ஆட்சியில் எப்படி இருந்தது தெரியுமா..!

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் சப்ளை செயின் பாதிப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் பாதிப்பின் எதிரொலி, ரெசிஷன் அச்சம் என எதுவும் குறையவில்லை. இதனால் சர்வதேச முதலீட்டு வர்த்தக சந்தையில் டாலரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

டாலர் ஆதிக்கத்தால் பல முன்னணி நாடுகளின் நாணய மதிப்பு தாறுமாறாக குறைந்திருக்கும் வேளையில் பொருளாதார நெருக்கடியிலும், நிதி நெருக்கடியிலும் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு தாறுமாறாக சரிந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போதையை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் நாற்காலி.. 2 இந்தியர்கள் போட்டி.. ஒருவருக்கு அதிக வாய்ப்பு..!

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய்

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 8.8 ரூபாய் அதாவது 4 சதவீதம் குறைந்து 224 ரூபாய் வரையில் சரிந்துள்ளது என போரெக்ஸ் அசோசியேஷன் ஆப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதேபோல் நேற்றைய வர்த்தக முடிவில் இச்சரிவில் இருந்து கணிசமாக உயர்ந்து 221.99 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இம்ரான் கான்

இம்ரான் கான்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது அரசாங்கத்தை “அமெரிக்க ஆட்சி சதி” என்று கூறி வெளியேற்றப்பட்ட போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 178 ரூபாயாக இருந்தது என்று ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது கூட்டணி ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

சர்வதேச நாணய நிதியம்
 

சர்வதேச நாணய நிதியம்

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) உயர்த்திக் காட்டப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறையைக் குறிப்பிட்டு IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளது என்று நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் சனிக்கிழமை கூறினார்.

4 பில்லியன் டாலர்

4 பில்லியன் டாலர்

ஜூலை மாத இறுதிக்குள் இந்த 4 பில்லியன் டாலர் இடைவெளியை நிரப்ப போதுமான கடன் கிடைக்கும் எனவும் மிஃப்தா இஸ்மாயில் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் உலக வங்கி மற்றும் IMF அமைப்பிடம் இருந்து பெற வேண்டிய 6 பில்லியன் டாலர் கடன் பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

இந்தியா, ஐரோப்பா

இந்தியா, ஐரோப்பா

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18ஆம் தேதி 80.064 என்ற வரலாற்று சரிவை பதிவு செய்தது. இதேபோல் ஜனவரி 23ஆம் தேதி 74.41 ரூபாய் என்ற அதிகப்படியான அளவீட்டை 2022ல் பதிவு செய்தது.

இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு 0.98 ஆக சரிந்துள்ளது.

 பஞ்சாப் இடை தேர்தலில்

பஞ்சாப் இடை தேர்தலில்

மேலும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் பகுதியில் நடந்த இடை தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சிக்கு எதிராக ஷெபாஸ் ஷெரீப் கட்சி மாபெரும் தோல்வியை பதிவு செய்தது. இதை தொடர்ந்து ஷெபாஸ் ஷெரீப் 9 கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்தினார்.

ஷெபாஸ் ஷெரீப் கட்சி

ஷெபாஸ் ஷெரீப் கட்சி

இக்கூட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் சாத் ரபீக் கூறுகையில், இக்கூட்டணி கட்சி அதன் ஆட்சிக்காலம் முடிக்கும் வரையில் ஆட்சி செய்ய உரிமை உள்ளது என கூறினார். இதேவேளையில் இம்ரான் கான் கட்சி 20-க்கு 15 இடத்தில் வெற்றி பெற்ற நிலையில் விரைவில் பொது தேர்தல் நடக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan rupee hits at all time low; Imran Khan by-election victory troubles Shehbaz Sharif Govt

Pakistan rupee hits at all time low; Imran Khan by-election victory troubles Shehbaz Sharif Govt பாகிஸ்தானை பதம் பார்க்கும் அமெரிக்க டாலர்.. இம்ரான் கான் ‘எங்க ஆட்சியில் எப்படி இருந்தது தெரியுமா’..!

Story first published: Wednesday, July 20, 2022, 13:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.