லண்டன்: பிரிட்டன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை நேற்று பதிவானது.பிரிட்டனின் சராசரி வெப்பநிலை 18 – 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இரு நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது.
அந்நாட்டின் வரலாற்றில் 2019 ஜூலையில் கேம்பிரிட்ஜ் பகுதியில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது. இதை முறியடிக்கும் விதமாக நேற்று லண்டன் ஹீத்ரோவ் விமான நிலைய பகுதியில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. . மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
அனலில் இருந்து தப்பிக்க நேற்று மக்கள் பலர் நீச்சல்குளம், கடற்கரையில் பொழுதை போக்கினர்.வட ஆப்ரிக்கா, சஹாரா பாலைவன பகுதியில் இருந்து வீசும் வெப்பக்காற்று வழக்கத்தை விட வடக்கு பகுதியை நோக்கி அதிகளவில் வீசியதே இந்த கடும் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது போல ஐரோப்பாவின் பிரான்ஸ், கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.
பிரான்சில் நிலவும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் அங்கு 42 ஆயிரம் ெஹக்டர் பரப்பு காடுகள் தீப்பற்றி எரிந்தன. ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயிலால் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே பிரிட்டனில் நாளை முதல் வெயில் குறைந்து 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement