பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான இறுதிப்போட்டியில் நிற்கப்போகும் இரண்டு வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்பட்ட உள்ளது.
இப்போதைக்கு பிரதமர் பதவிக்கான போட்டியில் மூன்று பேர் உள்ளார்கள். ரிஷி சுனக், பென்னி மோர்டாண்ட் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான கெமி பேடனாக் போட்டியிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார்.
இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்கெடுப்பு முடிவுகள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.00 மணியளவில் வெளியாகும்.
இன்று தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுபவர், செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்படுவார்.
photo- dailymail