பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பால் முகேஷ் அம்பானி ஹேப்பி..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்திய நிலையில், தற்போது இதன் அளவை குறைத்து ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தனியார் எரிபொருள் ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தளர்வு அளித்துள்ளது.

மத்திய அரசு இந்திய மக்களுக்குக் குறிப்பாக ரீடைல் சந்தையில் மக்களுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான வரியை அதிகரித்தது.

இந்த அறிவிப்பு வெளியான போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் அனைத்து நிறுவனப் பங்குகளும் சரிந்தது.

மத்திய நிதியமைச்சகம்

ஜூலை 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதேபோல் பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாயும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

 அரசுக்குக் கூடுதல் வருமானம்

அரசுக்குக் கூடுதல் வருமானம்

இந்த வரி உயர்வின் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்கு எரிபொருள் ஏற்றுமதி தற்போது இருக்கும் அளவு தொடர்ந்தால் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும், அதாவது 94,800 கோடி ரூபாய் கிடைக்கும் கணிக்கப்பட்டது.

எதிர்ப்பு
 

எதிர்ப்பு

ஆனால் இதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவிய வேளையில் மத்திய நிதியமைச்சர் இந்த வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து 19 நாட்களுக்குப் பின்பு இன்று இந்த ஏற்றுமதி வரி விதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

வரித் தளர்வு

வரித் தளர்வு

இன்று வெளியான மத்திய அரசின் அறிவிப்பில் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரியில் 2 ரூபாய் குறைக்கப்பட உள்ளது, இதேபோல் பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட 6 ரூபாய் ஏற்றுமதி வரியை மொத்தமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி

கச்சா எண்ணெய் ஏற்றுமதி

இதேபோல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் வரியை ஒரு டன்னுக்கு 27 சதவீதம் குறைத்து 17,000 ரூபாயாகக் குறைத்துள்ளது. இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான கச்சா எண்ணெய் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஏற்றுமதி குறைப்பிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் முக்கிய காரணமாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்த வரித் தளர்வுகள் மூலம் இந்தியாவின் முன்னணி எரிபொருள் ஏற்றுமதி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப் (ONGC) நிறுவனம் பெரிய அளவில் பலன் அடைய உள்ளது.

ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி

ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி

ரிலையன்ஸ் மற்றும் ரோஸ்நேப்ட் ஆதரவு நயாரா எனர்ஜி லிமிடெட், இந்தியாவின் ஒரே தனியாருக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் 80% முதல் 85% வரையிலான ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரித் தளர்வு ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி-க்கு ஜாக்பாட் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt cuts taxes on petrol, diesel, ATF exports; Reliance, Nayara Energy, ONGC benefits lot

Modi Govt cuts taxes on petrol, diesel, ATF exports; Reliance, Nayara Energy, ONGC benefits lot பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரிக் குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பால் முகேஷ் அம்பானி ஹேப்பி..!

Story first published: Wednesday, July 20, 2022, 10:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.