கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
மகன் அர்ஜுன் (14) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டைவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த முருகன் போதையில் மனைவி என்று நினைத்து தூங்கிக்கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழுவிக் கல்லை தூக்கிபோட்டுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அர்ஜுன், அதே இடத்தில் இறந்தார்.
இது பற்றி தகவல்அறிந்த புதுப்பேட்டைபோலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
மேலும், மகனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற மகனையே தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in