Rohit Sharma Tamil News: கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்தாண்டு கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றது. இதில் முதலில் நடந்த கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் தொடர் 2-2 என்கிற கணக்கில் சமமானது. ஆதலால் இரு அணி வீரர்களும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.
பிறகு, தொடர்ந்து நடந்த 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்கிற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்கிற கணக்கிலும் என்று இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. டி-20 தொடரின் நாயகன் விருதை இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரும், ஒருநாள் தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா-வும் வென்று அசத்தினர்.
டி-20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையிலான இந்திய அணி (இப்போட்டி வரை) ஒரு ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.
𝗖. 𝗛. 𝗔. 𝗠. 𝗣. 𝗜. 𝗢. 𝗡. 𝗦! 🏆👏👏#TeamIndia | #ENGviND pic.twitter.com/8SETL5xAhh
— BCCI (@BCCI) July 17, 2022
🚨 Milestone Alert 🚨
First captain to win 1⃣3⃣ successive T20Is – Congratulations, @ImRo45. 👏 👏#TeamIndia | #ENGvIND pic.twitter.com/izEGfIfFTn
— BCCI (@BCCI) July 7, 2022
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்…
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் கலந்து கொள்ள இருக்கிறது. இதில் ஜூலை 22ம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். அணியின் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட இருக்கிறார். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள் அணி பட்டியல் பின்வருமாறு:-
ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப்.
5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இத்தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த 18 பேர் கொண்ட அணியில் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களின் உடற்தகுதிக்கு உட்பட்டு அணியில் இணைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய டி-20 அணி பட்டியல் பின்வருமாறு:-
இங்கிலாந்து தீம் பார்க்கில் மனைவி- மகளுடன் ரோகித்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைராவுடன் இங்கிலாந்தில் சுற்றுலா செய்து வருகிறார். இந்நிலையில், கேப்டன் ரோகித் தனது மனைவி- மகளுடன் இங்கிலாந்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil