கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் வீட்டில் வட்டாட்சியர் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ம் திகதி, பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடலுக்கு நேற்று மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க வராததால், வட்டாட்சியர் விஜய பிரபாகரன் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.
பின்னர், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் நோட்டீஸ் வழங்கி, கையெழுத்து வாங்கி சென்றனர்.