கடந்த 2016 ஆம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீரென சோதனை ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் குட்கா வியாபாரி மாதவரம், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலாய்த்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கின் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், ரமணா ஆகியோரை விசாரிக்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேரை விசாரிக்க சி.பி.ஐ அனுமதி கோரியுள்ளது.