முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ராஜ்யசபை எம்.பி.யாக இன்று பதவியேற்பு

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 நாட்களாக இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கின.

இந்த சூழலில், இன்றைய கூட்டத்தொடர் கூடவுள்ளது. ராஜ்யசபை காலை 11 மணிக்கு கூடிய பின்னர், பிரபல முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி. உஷா ராஜ்யசபை எம்.பி.யாக இன்று பதவியேற்று கொள்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தமற்றும் மத தலைவர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரை ராஜ்யசபை எம்.பி.க்களாக ஆளும் பா.ஜ.க. நியமனம் செய்துள்ளது. தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் வகையில் பா.ஜ.க. இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது என பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை பி.டி. உஷா நேற்று நேரில் சந்தித்து பேசினார். ராஜ்யசபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட உஷாவுக்கு நட்டா தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.