முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உர விநியோகம் கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (19) வழங்கப்பட்டுள்ளது.
பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு 25 மெற்றிக் தொன் யூரியா உரமும் , குமுழமுனை கமநல சேவை நிலையத்திற்கு 25 மெற்றிக் தொன் உரமும் உடையார்கட்டு கமநல சேவை நிலையத்திற்கு 23.5 மெற்றிக் தொன் யூரியா உரமும் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன.
50 நாட்களுக்குட்பட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40 கிலோ கிராம் வீதம் உரம் வழங்கப்பட்டது.
மிகுதி ஒரு பகுதி உரத்தினை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருந்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் திரு. ஆர் பரணீகரன் தெரிவித்துள்ளார்.