திருவனந்தப்புரம்: முல்லைபெரியாறில் புதிய அணை அமைக்க வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு என அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார். அணையின் நீர்மட்டம் 136 அடி என்பதே கேரளாவின் அடுத்த நிலைப்பாடும் கூட, இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். முல்லைபெரியாறில் புதிய அணைக்கான இடம் கண்டறிப்பட்டு திட்ட மதிப்பீட்டு அறிக்கையும் தயார் என அமைச்சர் கூறினார்.