ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமர் போட்டியில் வெற்றி பெற்றால், வெளிநாட்டில் உச்சபட்ச தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்திய வம்சாவளினர் பட்டியலில் 6-வது இடத்தை பிடிப்பார் என தெரியவந்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், செவ்வாய்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று வாக்கெடுப்பில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு முன்னிலை வகித்தார்.
பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் மற்றும் ஜூனியர் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் ஆகியோர் ரிஷி சுனக்கை எதிர்த்து தொடர்ந்து போட்டியிடுவதால், போட்டி இப்போது மும்முனையாகா மாறியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமனற உறுப்பினர்கள் அடுத்த பிரதம மந்திரி ஆவதற்கு இறுதி இரண்டு வேட்பாளர்களை இன்று தெரிவு செய்வார்கள்.
இந்நிலையில், பிரித்தானியாவன் அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் மட்டும் வெற்றி பெற்றால், வெளிநாட்டில் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்கும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் 6-வைத்து இடத்தை பிடிப்பார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருக்கும் இந்திய வம்சாவளி தலைவரான கமலா ஹாரிஸையும் இந்த பட்டியலின்படி ரிஷி சுனக் பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் கமலா ஹாரிஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளார். அனால், ரிஷி சுனக் பிரதமரானால், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்படுவார்.
உலகளாவிய ரீதியில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான இந்தியாஸ்போராவால் (Indiaspora) ஒரு விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் சில முக்கிய பெயர்கள் இங்கே:
1, அன்டோனியோ கோஸ்டா, பிரதமர், போர்ச்சுகல்
2, முகமது இர்ஃபான், ஜனாதிபதி, கயானா
3, பிரவிந்த் ஜக்நாத், பிரதமர், மொரீஷியஸ்
4, பிருத்விராஜ்சிங் ரூபன், ஜனாதிபதி, மொரீஷியஸ்
5, சந்திரிகா பர்சாத் சந்தோகி, ஜனாதிபதி, சுரினாம்
6, கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதி, அமெரிக்கா
மொரிஷியஸில், பிரவிந்த் ஜக்நாத் மற்றும் பிருத்விராஜ்சிங் ரூபன் உட்பட ஒன்பது தலைவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதேபோல், சுரினாம் நாட்டிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். மேலும், கயானாவில் நான்கு தலைவர்களும், சிங்கப்பூரில் மூன்று தலைவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்த நாடுகளைத் தவிர, டிரினிடாட் & டொபாகோ, போர்ச்சுகல், மலேசியா, பிஜி, அயர்லாந்து மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரச தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளன.