ரூ.28.6ல் இருந்து 546.6.. 1800% வருமானம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா!

பங்கு சந்தையில் என்ன தான் ஏற்ற இறக்கம் இருந்தாலும், சில பங்குகள் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது நல்ல லாபம் கொடுத்துள்ள பங்குகளில் ஒன்றாக உள்ளன.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ஆதரவு கொண்டுள்ள ராகவ் புரொக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் பற்றித் தான்.

சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் உலகளவில் பவுண்டரி மற்றும் காஸ்டிங் துறையில் சிலிக்கா ராம்மிங் மாஸ் விற்பனைக்கு பங்குதாரராக இங்கிலாந்தினை தளமாக கொண்ட கேபிடல் ரிஃப்ராக்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விப்ரோ: லாபத்தில் 21 சதவீதம் சரிவு.. என்ன காரணம்..?

வளர்ச்சி மேம்படலாம்

வளர்ச்சி மேம்படலாம்

இது அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் எனவும், இது நிறுவனத்தின் வளர்ச்சியினை தூண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான வருவாயினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்றம் காணலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய முதலீட்டாளர்கள் வருமானம்

முக்கிய முதலீட்டாளர்கள் வருமானம்

இந்த மல்டிபேக்கர் பங்கில் முக்கிய முதலீட்டாளர்களான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, ரமேஷ் தமனி, முகுல் அகர்வால், உட்பால் சேத் உள்ளிட்ட பலரும் முதலீடு செய்துள்ளனர்.

இப்பங்கின் விலையானது கடந்த 6 ஆண்டுகளில் 28.60 ரூபாயில் இருந்து, 546.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது அதன் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கிட்டதட்ட 1800 சதவீதம் வருவாயினை கொடுத்துள்ளது.

1 மாத நிலவரம்
 

1 மாத நிலவரம்

ஆகஸ்ட் 2021 முதல் சரிவினைக் கண்டு வந்த நிலையில், இந்த மல்டிபேக்கர் பங்கு கடந்த ஒரு மாதத்தில் வலுவாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்த மல்டிபேக்கர் பங்கானது 459 ரூபாய் முதல் 546.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 20% ஏற்றம் கண்டுள்ளது.

ராகவ் புரொக்டிவிட்டி பங்கு வரலாறு

ராகவ் புரொக்டிவிட்டி பங்கு வரலாறு

இதே ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சரிவினையே கண்டுள்ளது. இது குறிப்பாக அதன் 52 வார உச்சத்தில் இருந்து 1008.50 ரூபாயில் இருந்து (ஆகஸ்ட் 2021), மே 2022ல் 434 ரூபாயாக சரிவினைக் கண்டது. கடந்த ஒரு வருடத்தில் வெறும் 5% வருமானத்தினை மட்டுமே கொடுத்துள்ளது.

6 வருட நிலவரம்

6 வருட நிலவரம்

இதே கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 79.29 ரூபாயில் இருந்து 546.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 590% ஏற்றம் கண்டுள்ளது. இதே ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1800% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இது 28.61 ரூபாயில் இருந்து, 546.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

முதலீட்டின் நிலவரம்

முதலீட்டின் நிலவரம்

முதலீட்டாளர்கள் இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.20 லட்சம் ரூபாயாகும். இதே கடந்த ஒரு வருடத்தில் 1.05 லட்சம் ரூபாயாக இருக்கும். 5 வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 6.90 லட்சம் ரூபாயாகும். இதே 6 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 19 லட்சம் ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.28.6 to 546.5: This multibagger stock gives 1800% return in 6 years: do you have it?

Rs.28.6 to 546.5: This multibagger stock gives 1800% return in 6 years: do you have it?/ரூ.28.6ல் இருந்து 546.6.. 1800% வருமானம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.