புதுடெல்லி: இந்தியச் சந்தையில் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
iQOO நியோ 6, ஒன்பிளஸ் நார்ட் 2T 5ஜி, போக்கோ F4 5ஜி, சியோமி 11i ஹைப்பர் சார்ஜ் போன்ற போன்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை இந்த போன் கொடுக்கும் என தெரிகிறது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். இப்போது ரெட்மி K50i ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மீண்டும் K சீரிஸ் போன்களை இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.
வரும் ஜூலை 23-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
- 6.6 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன். இதன் ரெப்ரெஷ் ரேட் 144hz.
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி Dimensity 8100 சிப்செட் புராசஸரை கொண்டுள்ளது இந்த போன்.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.
- பின்புறத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
- 5080 mAh திறன் கொண்ட பேட்டரி இதில் இடம் பெற்றுள்ளது. 67 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் கொண்டுள்ளது இந்த போன். வெறும் 46 நிமிடத்தில் இதன் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்யலாம் என தெரிவித்துள்ளது ரெட்மி. முக்கியமாக சார்ஜர் இந்த போன் பாக்ஸ் உடன் கொடுக்கப்படுகிறது.
- டால்பி ஆட்டம் சப்போர்ட்டை கொண்டுள்ளது இதில் உள்ள டியூயல் ஸ்பீக்கர், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் 2.0 இதில் உள்ளது.
- 5ஜி இணைப்பு வசதி மற்றும் IP53 வாட்டர் ரெசிஸ்டன்டை இந்த போன் கொண்டுள்ளது.
- 6ஜிபி வேரியண்ட் ரூ.25,999-க்கும், 8ஜிபி வேரியண்ட் ரூ.28,999-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Here’s a recap of the EXTREME Beast #RedmiK50i –
@MediatekIndia Dimensity 8100
144Hz Refresh rate
Dolby Vision & Dolby Atmos
64MP Triple Camera
67W Turbo Charge
Truly Global 5G#LiveExtreme pic.twitter.com/iztWsLBZ06— Redmi India | Redmi K50i (@RedmiIndia) July 20, 2022