நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ இன்று அதன் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் வரிக்கு பின்பு 20.94% குறைந்து, 2563.6 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 3242.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரினை தலைமையிடமாகக் கொண்ட இந்த ஐடி நிறுவனத்தின் நிகர லாபம் 3087 கோடி ரூபாயில் இருந்து, 16.96% குறைந்துள்ளது.
ஆபீஸ், வீடு, வாகனம் எல்லாமே சோலார்.. அசத்தும் ஊழியர்.. மாதம் ரூ.18,000 மிச்சம்.. எப்படி?
வருவாய் விகிதம்
விப்ரோ நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.8% குறைந்தும், கடந்த ஆண்டினை காட்டிலும் 8.1% குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதே இந்த ஐடி நிறுவனத்தின் வருவாய் விகிதம் 19% அதிகரித்து, 21,529 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 18,252.4 கோடி ரூபாயாக இருந்தது.
டாலரில் என்ன நிலை?
இதே டாலரின் மதிப்பில் ஐடி நிறுவனத்தின் வருவாய் விகிதம் 13.3% அதிகரித்து, 1.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதே இந்த ஐடி நிறுவனத்தின் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது 15% ஆக உள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 200 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.
பங்கு சரிவு
இந்த காலாண்டர் ஆண்டில் விப்ரோ நிறுவனத்தின் பங்கானது நடப்பு காலாண்டில் இதுவரையில் மட்டும் 43% சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்த காலகட்டத்தில் நிஃப்டி 50 மற்றும் பி எஸ் இ சென்செக்ஸ் முறையே 8% சரிவினைக் கண்டுள்ளன.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
இன்றைய பங்கு விலையானது என் எஸ் இ-யில் 1.59% அதிகரித்து, 412.10 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 417.50 ரூபாயாகவும், இதன் குறைந்தபட்சம் 407.10 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 739.85 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 391 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 1.63% அதிகரித்து, 412.20 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 417.70 ரூபாயாகவும், இதன் குறைந்தபட்சம் 407.10 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 739.80 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 391 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
wipro reported net profit declined 21% to Rs.2563.6 crore
wipro reported net profit declined 21% to Rs.2563.6 crore/லாபத்தில் 21% சரிவு.. விப்ரோ கொடுத்த அப்டேட்.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?